நடிகர் விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து விஜய், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க படமானது செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் வேலைகள் இன்னும் பாக்கி இருப்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அதனால் தனது கடைசி படம் தளபதி 69 படம் தான் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி விஜயின் 69 ஆவது படத்தை எச் வினோத் இயக்கப் போவதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் தளபதி 69 படமானது அரசியல் கதைகளத்தில் உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு 2024 அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என்று ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் தளபதி 69 படப்பிடிப்பு 2024 நவம்பர் மாதத்தில் தான் தொடங்கும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. எனவே இயக்குனர் எச் வினோத் தளபதி 69 படத்திற்கான வசனம் எழுதும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விரைவில் தளபதி 69 படம் தொடர்பான அறிவிப்பும் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.