Homeசெய்திகள்சினிமாஉறுதிமொழியுடன் மாணவர்களிடம் பேசத் தொடங்கிய தளபதி விஜய்!

உறுதிமொழியுடன் மாணவர்களிடம் பேசத் தொடங்கிய தளபதி விஜய்!

-

- Advertisement -

தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக முதன்முறையாக மாணவர்களை சந்திக்கிறார் விஜய். இந்த விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.உறுதிமொழியுடன் மாணவர்களிடம் பேசத் தொடங்கிய தளபதி விஜய்! இன்று (ஜூன் 28) காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ள இந்த விழாவிற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தொகுதி வாரியாக வருகை தந்துள்ளனர். இவர்களை தவெக கட்சி நிர்வாகிகள் தண்ணீர் பாட்டில், ஜூஸ் போன்ற அனைத்தும் வழங்கி வரவேற்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களும் சிறப்பாக கவனிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

இந்த விழாவிற்கு இன்று காலையிலேயே திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரன் திருமண மண்டபத்திற்கு நடிகர் விஜய் முதல் ஆளாக வருகை தந்தார். அவர் மண்டபத்தில் நுழைந்ததும் ரசிகர்கள் பலரும் ஆரவாரத்துடன் தளபதி விஜயை வரவேற்றனர். அதை தொடர்ந்து மாணவர்களிடம் பேசத் தொடங்கினார் விஜய். அப்போது பேசிய அவர், “Say No to Temporary pleasures, Say No to Drugs” என்ற உறுதிமொழியுடன் தனது உரையை தொடங்கி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

MUST READ