பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தில் வெளியாகி இருந்த இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் பிஎஸ் மித்ரன். அதன்படி சர்தார் 2 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதேசமயம் இந்த படத்தின் பூஜையும் சிறப்பாக நடைபெற்ற நிலையில் படத்தின் ப்ரோமோக்கான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் சர்தார் 2 திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த நடிகை வேறு யாருமில்லை. விஜயின் மாஸ்டர், விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் தான். மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.