தங்கலான் பட ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என ஜி.வி. பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இந்த படமானது கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி , பசுபதி போன்ற பலரும் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். கிஷோர் குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஆர் கே செல்வா எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து முதல் பாடல் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையிலே இப்படமானது 2024 ஏப்ரல் மாதத்தில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் இதுவரை அறிவிக்கவில்லை.
#thangalaan bgscore completed … have given my best … what a film ❤️…. Looking forward to…..And what a terrific trailer is on ur way soon ur gonna be mind blown . Indian cinema get ready for #thangalaan @chiyaan @beemji @StudioGreen2
— G.V.Prakash Kumar (@gvprakash) July 1, 2024
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தங்கலான் படத்தின் பின்னணி இசை முடிந்தது. என்னுடைய சிறந்ததை நான் கொடுத்திருக்கிறேன். என்ன ஒரு படம். படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் அற்புதமான ட்ரெய்லர் விரைவில் வரப்போகிறது. இந்திய சினிமாவே தங்கலானுக்காக தயாராகுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.