தனி ஒருவன் படத்தை தொடர்ந்து அந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளிவரும் என தகவல் வெளிவந்துள்ளது.
இயக்குநர் மோகன் ராஜா இயகத்தில் 2015ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தனி ஒருவன். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது.

இப்படத்தில் ஜெயம் ரவி, நயந்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நடிப்பு, இசை, கதை, வசனம் என ரசிகர்களின் மனதிற்கு மிகவும் பிடித்துப்போனது. இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார்.
இந்நிலையில், விரைவில் தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என இயக்குநர் மோகன் ராஜா உறுதிபட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சொப்பண சுந்தரி திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மோகன் ராஜா பேசுகையில், “நானும் தம்பி ஜெயம் ரவியும் பல வேலைகளில் பிஸியாக இருக்கிறோம். இருவருக்கும் நேரம் கிடைக்கும்போது தனி ஒருவன் பாகம்-2 படப்பிடிப்பு தொடங்கும்.” என்று தெரிவித்துள்ளார்.