- Advertisement -
யாஷ் நடிக்கும் 19-வது படம் குறித்த அறிவிப்பு அவரது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 8-ம் தேதி வெளியாகிறது.

கேஜிஎப் படத்தின் வெற்றிக்கு பிறகு கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாறி இருப்பவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியான கேஜிஎஃப் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த ஆண்டு இரண்டாம் பாகம் வெளியானது. உலகம் முழுவதும் வெளியானத இரண்டாம் பாகம் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து இதுவரை, கன்னட சினிமாவில் எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை புரிந்தது. பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில், யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.


தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகை மற்றும் இயக்குனராக வலம் வரும் கீத்து மோகன்தாஸ் யாஷின் அடுத்த படத்தை இயக்குகிறார். அவர் தமிழில் ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அடுத்து, மாதவன் நடிப்பில் வெளியான ‘நளதமயந்தி’ படத்தில் கதாநாயகியாக அவர் நடித்தார். பின்னர் மலையாளத்தில் ‘லயர் டயஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருதையும் கீத்து பெற்றார். நிவின் பாலியை வைத்து ‘மூத்தோன்’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கினார்.



