தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 170வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்குகிறார். இதில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பு வரும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை, புதுச்சேரி போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த மே மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் மஞ்சும்மெல் பாய்ஸ் படக்குழுவினரை போல் ஆர்டிஎக்ஸ் படக்குழுவினர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். படத்தில் சண்டை பயிற்சியாளர்களாக பணியாற்றிய அன்பு – அறிவு மாஸ்டர்களும் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த மலையாளத் திரைப்படம் தான் ஆர்டிஎக்ஸ். இந்த படத்தில் ஷேன் நிகாம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -