Homeசெய்திகள்சினிமா'ஸ்டார்' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிம்பு!

‘ஸ்டார்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிம்பு!

-

நடிகர் கவின் சின்னத்திரை இருந்து வெள்ளித்திரைக்கு சென்று ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். 'ஸ்டார்' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிம்பு!இதற்கிடையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு டாடா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து கவின், ஸ்டார் எனும் திரைப்படத்தின் நடித்துள்ளார். இந்த படத்தை ப்யார் பிரேமா காதல் படத்தில் இயக்குனர் இளன் இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார். படத்தில் கவின்,ஆதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் கவின் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. இதற்கிடையில் படத்தின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இன்று இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஸ்டார் படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை துரத்துவதை இந்த படம் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ