Homeசெய்திகள்சினிமாபிரபல பிக்பாஸ் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..... வைரலாகும் போட்டோஸ்!

பிரபல பிக்பாஸ் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது….. வைரலாகும் போட்டோஸ்!

-

- Advertisement -
kadalkanni

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு அடையாளம் முதல் ஏழு சீசன்களும் வெற்றிகரமாக நிறைவடைந்து 2024 அக்டோபர் மாதத்தில் எட்டாவது சீசன் தொடங்க இருக்கிறது. பிரபல பிக்பாஸ் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..... வைரலாகும் போட்டோஸ்!இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள். அதே சமயம் அவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வரும். இந்நிலையில் கடந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பிரதீப் ஆண்டனி தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர். இவர் கடந்த 2016 இல் வெளியான அருவி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான வாழ் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து டாடா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரதீப் ஆண்டனி. இவர் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தனக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக சில புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் பிரதீப் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ