தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் சூரி. அதேசமயம் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் களமிறங்கி வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து கருடன் ஆகிய வெற்றி படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். அடுத்தது இவரது நடிப்பில் உருவாகி இருந்த மாமன் திரைப்படம் நேற்று (மே 16) உலகம் முழுவதும் வெளியானது. விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா லக்ஷ்மி, சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து சுவாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், பாலசரவணன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
தாய்மாமன் – குட்டி மருமகன் ஆகிய இருவருக்குமான பாசப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த ஒரு சிறுமி, கண்ணீர் விட்டு ஏங்கி ஏங்கி அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த சூரியின் நண்பர், சூரியை தொடர்பு கொண்டு நடந்ததை விவரித்துள்ளார். உடனே சூரி, வீடியோ கால் மூலம் அந்த குழந்தையிடம் பேசி அந்த சிறுமிக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவை நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, “இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ. மாமன் படத்தை பார்த்த பிறகு இந்த பாப்பா தன்னுடைய தாய் மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா.
இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ!
“மாமன்” படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா…இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு.
தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின்… pic.twitter.com/4kvoghXsma
— Actor Soori (@sooriofficial) May 16, 2025
இது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின் தாய் மாமாவுக்கு இந்த படத்தின் வாயிலாக என் அன்பும் மனமார்ந்த வாழ்த்துக்களும்” என்று பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.