Homeசெய்திகள்சினிமாநடிகர் அஜித் ஆரம்பித்துள்ள கார் ரேஸிங் அணியின் லோகோ வெளியீடு!

நடிகர் அஜித் ஆரம்பித்துள்ள கார் ரேஸிங் அணியின் லோகோ வெளியீடு!

-

அஜித் ஆரம்பித்துள்ள கார் ரேஸிங் அணியின் லோகோ வெளியாகி உள்ளது.நடிகர் அஜித் ஆரம்பித்துள்ள கார் ரேஸிங் அணியின் லோகோ வெளியீடு!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு எந்த படம் வெளியாகும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதேசமயம் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியான நிலையில் தற்போது அந்த படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும் அடுத்த படம் இன்னும் வெளிவரவில்லை என்ற வருத்தமும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் தான் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடிகர் அஜித், கார் ரேஸிங் அணி ஒன்றை தொடங்கி இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே நடிகர் அஜித் பைக், கார் ரேஸிங்கில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதன்படி பல பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். நடிகர் அஜித் ஆரம்பித்துள்ள கார் ரேஸிங் அணியின் லோகோ வெளியீடு!அதன்படி நடிகர் அஜித், தான் தொடங்கி இருக்கும் அஜித்குமார் ரேஸிங் அணியின் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் துபாயில் நடைபெற இருக்கும் 24H யூரோப் கார் ரேஸிங்கில் ‘போர்ஷே 992 ஜிடி 3 கப்’ என்ற பிரிவின் கீழ் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்கும் என்றும் அந்த அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அஜித்குமார் கார் ரேஸிங் லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது. இது தகவல் அறிந்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

MUST READ