விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டிற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நூற்றுக்கணக்கான போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரசிகர்களும் தொண்டர்களும் மாநாட்டில் கலந்து கொள்ள திரண்டு வருகின்றனர். அந்த வகையில் சுமார் 8 லட்சம் பேர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். தொண்டர்களுக்காகவே ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மாநாடு தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் மேடை ஏறியவுடன் தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பினர். பின்னர் மாநாட்டில் விஜய், கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தியதை தொடர்ந்து த.வெ.க கொடியை பட்டனை அழுத்தி ஏற்றி வைத்தார். 100 அடி உயர கம்பத்தில் அக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது . அடுத்ததாக மேடையில் கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. அந்த பாடலில் பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் போன்ற கொள்கை தலைவர்கள் விஜய்க்கு வழி காட்டுவது போல கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட ரசிகர்கள் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி கரகோஷம் செய்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.