ஆக்டா் விமல் ஹீரோவாக நடிக்கும், அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் டைரக்சனில் காமெடி எண்டர்டெயினராக புதிய படம் உருவாகியுள்ளது. அப்படத்தின் பூஜை துவங்கியுள்ளது.அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரெடெக்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் விநாயகா அஜித் டைரக்சனில், ஆக்டா் விமல் ஹீரோவாக நடிக்கும், அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் டைரக்சனில், கிராமப்புற பின்னணியில், காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படம் இதுவாகும். காரைக்குடியில், படக்குழுவினர்கள் கலந்து கொண்டு எளிமையான முறையில் இப்படத்தின் பூஜை துவங்கினாா்கள்.
மலையாளத் திரையுலகில் “ககனச்சாரி, பொன்மேன்படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் டைரக்டு செய்த அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரெடெக்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இப்புதிய படத்தின் மூலமாக, தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ளனர். டைரக்டா் விநாயகா அஜித் இப்படத்தை, பிரம்மாண்டமாக பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றார்.
இப்படத்தில் ஹீரோவாக விமல் மற்றும் ஹீரேனியாக முல்லை அரசியுடன், விடுதலை, சேத்தன், பருத்திவீரன், சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்து வருகிறார்கள். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடும் வகையில் ஒரு அசத்தலான காமெடி எண்டர்டெயினராக அமையும். இப்படத்தை, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்குகின்றனர்.
எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் பீனிக்ஸ் பிரபு, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித் கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர். கிராமத்து பின்னணியை மையமாக வைத்து இப்படமான உருவாகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த மற்ற தகவல்கள், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனா்.
40.27 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை…துணை முதல்வர் நேரில் ஆய்வு!