Homeசெய்திகள்சினிமா'தக் லைஃப்' படத்தால் 'இந்தியன் 3' படத்திற்கு வந்த சிக்கல்!

‘தக் லைஃப்’ படத்தால் ‘இந்தியன் 3’ படத்திற்கு வந்த சிக்கல்!

-

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். கடந்த 1996 இல் வெளியான இந்தியன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. 'தக் லைஃப்' படத்தால் 'இந்தியன் 3' படத்திற்கு வந்த சிக்கல்!இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வி படமாக அமைந்தது. ஆனால் இந்தியன் 2 படத்தின் இறுதியில் இடம் பெற்றிருந்த இந்தியன் 3 படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்து எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் படக்குழு இந்தியன் 2 படத்தின் ரிலீஸுக்கு பின்னர் ஆறு மாதங்கள் கழித்து இந்தியன் 3 திரைப்படம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது.

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி, ராஜஸ்தான், சென்னை, கோவா போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 'தக் லைஃப்' படத்தால் 'இந்தியன் 3' படத்திற்கு வந்த சிக்கல்!விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து விடும் எனவும் 2024 டிசம்பர் மாதத்தில் படமானது திரைக்கு வரும் எனவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் 2025 ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப் போவதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக இந்தியன் 3 திரைப்படத்தின் ரிலீஸும் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ