சூர்யா ரசிகர்களுக்காக அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது ‘கருப்பு’ திரைப்படத்திலும் ‘சூர்யா 46’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடித்து வருகிறார். அதில் ஆர்.ஜே .பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்படிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் இருந்து டீசரும், முதல் பாடலும் ஏற்கனவே வெளியான நிலையில் அடுத்தது இரண்டாவது பாடல் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

இது தவிர வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 46’ படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் சூர்யா தனது 47 வது திரைப்படத்தை ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யா, போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் பட்சத்தில் அதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. எனவே ரசிகர்களும் அதனை கொண்டாட இப்பொழுதே தயாராகி வருகிறார்கள்.


