- Advertisement -
நயன்தாரா, மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் டெஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. திருமணமாகி இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான பின்பும், கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். முதல் போல இல்லாமல், வெறும் கமர்ஷியல் படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், நாயகிக்கும், கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடிப்பதில் நயன்தாரா ஆர்வம் காட்டி வருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அன்னபூரணி.
இத்திரைப்படம் தமிழில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படம் டெஸ்ட். இப்படத்தில் நயனுடன் மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மீரா ஜாஸ்மினும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பாக வௌியானாலும், அண்மையில் தான் படத்திற்கு டெஸ்ட் என தலைப்பு வைத்து முதல் தோற்றத்தை பகிர்ந்தனர்.
And its a wrap👐 #TheTest 🏏 pic.twitter.com/UpHMxFBxJK
— Nayanthara✨ (@NayantharaU) January 31, 2024