தனுஷ் கடந்த 2017 இல் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோரின் நடிப்பில் ப. பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே அடுத்ததாக தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்க திட்டமிட்டார் தனுஷ். அதன்படி மாஸான கேங்ஸ்டர் கதைக்களத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் தனுசுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, சரவணன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமானது வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் கடந்த ஜூலை 6-ம் தேதி இந்த படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் ராயன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஏனென்றால் ராயன் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தணிக்கை குழு சில காட்சிகளை நீக்கிவிட்டால் யுஏ சான்றிதழ் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படம் சூப்பராக இருக்கிறது. எந்த காட்சியையும் நீக்க தேவையில்லை. படம் ஓடிடிக்கு போகும்போது சில காட்சிகளை நீக்கி வேறு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம்.
‘ராயன்’ படத்தில் அதிகம் இருக்கும் வன்முறை காட்சிகள்….. ‘ஏ’ சான்றிதழுக்கு ஓகே சொன்ன தயாரிப்பாளர்!
-
- Advertisement -