Homeசெய்திகள்சினிமாகுறைவான சம்பளத்திற்கு இறங்கி வந்த நயன்தாரா!

குறைவான சம்பளத்திற்கு இறங்கி வந்த நயன்தாரா!

-

- Advertisement -

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.குறைவான சம்பளத்திற்கு இறங்கி வந்த நயன்தாரா! தற்போது நயன்தாரா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் வலம் வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடிக்கும் நயன்தாரா கடைசியாக அன்னபூரணி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தது. எனவே இந்த படத்திற்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் குறைந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்தன.குறைவான சம்பளத்திற்கு இறங்கி வந்த நயன்தாரா! இருப்பினும் நயன்தாரா மண்ணாங்கட்டி போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படத்தில் யாஷுக்கு அக்காவாகவும் நடித்து வருகிறார். இதற்கிடையில் தான் நடிகை நயன்தாரா நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிப்பதாகவும் இந்த படத்தை விஷ்ணு எடாவன் இயக்கப் போவதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் முன்னதாக இந்த படத்திற்காக நடிகை நயன்தாரா 15 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டாராம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் 10 கோடி ரூபாய் தான் கொடுக்க முடியும் என்று ஸ்ட்ரெட்டாக சொல்லி விட்டார்களாம்.குறைவான சம்பளத்திற்கு இறங்கி வந்த நயன்தாரா! அதன் பின்னர் படமும் கைவிட வேண்டிய சூழ்நிலையில் இருந்த சமயத்தில் நடிகை நயன்தாரா தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு 10 கோடி ரூபாய் சம்பளம் எனக்கு ஓகே என்று சொன்னாராம். அதன் பின்னர் தான் கவின் நயன்தாரா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடைபெற தொடங்கியதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏற்கனவே யாஷ் நடிக்கும் டாக்ஸிக் திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா, 20 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ