சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இவர்?
இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம் சிறுத்தை. இப்படத்தில் இரட்டை வேடத்தில் செம மாஸாக நடித்திருந்த கார்த்தியுடன் இணைந்து தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மேலும், இயக்குநர் சிவா இயக்கத்தில் வெளியான முதல் படமே வெற்றி அடைந்தால் இவரை சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார்.
மாபெரும் வெற்றியடைந்த இப்படம் வசூலில் சக்க போடு போட்டது. சிறுத்தை படத்தில் அனைவரும் கவர்ந்த கதாபாத்திரம் என்றால் கார்த்தியின் மகளாக நடித்த நடிகை பேபி ரக்ஷனா தான்.
இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருந்த நடிகை பேபி ரக்ஷனா தற்போது அடையாளமே தெரியாத அளவிற்கு அழகாக மாறியுள்ளார்.
சமீபத்தில் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறது.
பல வருடங்களுக்கு பிறகு, இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.