Homeசெய்திகள்சினிமாஉடம்பைக் காட்டி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.... உணர்வுப்பூர்வமாக பேசிய சாய்பல்லவி!

உடம்பைக் காட்டி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை…. உணர்வுப்பூர்வமாக பேசிய சாய்பல்லவி!

-

- Advertisement -

நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். உடம்பைக் காட்டி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.... உணர்வுப்பூர்வமாக பேசிய சாய்பல்லவி!அதை தொடர்ந்து இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அமரன் திரைப்படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பேட்டி ஒன்றில், உடம்பைக் காட்டி நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று கூறியுள்ளார். “பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக வெளிநாட்டில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது கொஞ்சம் கவர்ச்சியாக உடை அணிந்து நடனமாடினேன். ஆனால் பிரேமம் திரைப்படம் வெளிவந்த பிறகு நெட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவை வெளியிட்டு மோசமான விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். அப்போதுதான் முடிவு செய்தேன் இனிமேல் கவர்ச்சியாக நடிக்க கூடாது என்று.உடம்பைக் காட்டி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.... உணர்வுப்பூர்வமாக பேசிய சாய்பல்லவி! நான் ஒன்றும் சதை பிண்டம் இல்லை. உடம்பைக் காட்டி நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய இந்த லுக்கையை ரசிகர்கள் ரசித்து என் மீது அன்பைப் பொழிகின்றனர். அதனால் அதையே பின்பற்ற வேண்டும் என கருதி அதே ரூட்டில் செல்கிறேன். இதனால் எனக்கு பட வாய்ப்புகள் குறைகிறது என்றால் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. என்னுடைய நடிப்பு திறமையை நம்பி யார் நடிக்க வாய்ப்பு தருகிறார்களோ அவர்கள் படத்தில் நடித்துவிட்டு போகிறேன்” என்று உணர்வுப்பூர்வமாகவும் காட்டமாகவும் பதிலளித்துள்ளார் சாய்பல்லவி..

MUST READ