நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதே சமயம் இயக்குனராகவும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர் இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார். இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தனுஷ், பிரியங்கா மோகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கு அருள் மாதேஸ்வரன் Respect is Freedom என்று டேக் லைன் வைத்துள்ளார். அதாவது மரியாதை தான் சுதந்திரம். இந்த மரியாவை இங்கு யாருக்கு இருக்கிறது எதற்கு இருக்கிறது ஏன் இருக்கிறது என்பது தெரியவே இல்லை. எதை செய்தாலும் யோசித்து தான் செய்ய வேண்டியதாக இருக்கிறது. அப்படி யோசித்து செய்தாலும் அதை குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. சின்ன கூட்டம் தான். ஆனாலும் குறை சொல்லிவிட்டு கை காட்டிக் கொண்டு இருப்பது தான் சுதந்திரமா? யார் நல்லவன் கெட்டவன் என்பதை கடவுள் முடிவு செய்யட்டும்” என்று பேசியுள்ளார். அதை தொடர்ந்து “கேப்டன் மில்லர் திரைப்படம் ஒரு சர்வதேச படமாக இருக்கும் புதிய முறையை அருள் மாதேஸ்வரன் முயற்சி செய்திருக்கிறார். இது முற்றிலும் ஆக்சன் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கேப்டன் மில்லர் படம் குறித்தும் பேசியுள்ளார் தனுஷ்.
மேலும் இப்படம் தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படுகிறது. அந்தளவிற்கு மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.