Homeசெய்திகள்சினிமாசெய்யுற எல்லா விஷயத்துலயும் தப்பு கண்டுபுடிக்குறாங்க... ப்ரியங்கா சோப்ரா வேதனை!

செய்யுற எல்லா விஷயத்துலயும் தப்பு கண்டுபுடிக்குறாங்க… ப்ரியங்கா சோப்ரா வேதனை!

-

செய்யும் எல்லா விஷயத்திலும் தப்பு கண்டுபிடிக்குறாங்க என்று நடிகை ப்ரியங்கா சோப்ரா பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா தற்போது இன்டர்நேஷனல் நடிகையாக உயர்ந்துள்ளார். பல ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘ஆர்ஆர்ஆர்’ பாலிவுட் படமல்ல, அது தமிழ்ப் படம்’ என்று தவறுதலாக சொல்லிவிட்டார். இதையடுத்து சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்.

தற்போது ப்ரியங்கா சோப்ரா அவெஞ்சர்ஸ் படத்தின் இயக்குனர்கள் ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் ‘சிட்டடெல்’ வெப் சீரிஸ் புரமோஷனில் கலந்துகொண்ட போது ஆர்ஆர்ஆர் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ப்ரியங்கா, “நான் செய்யும் எல்லாவற்றிலும் தவறுகளைக் கண்டுபிடிக்கமுயற்சி செய்கிறார்கள். அதை அவர்கள் ரசிக்கிறார்கள் என நினைக்கிறேன். இதற்கு முன்னர் சுதந்திர மனப்பான்மையோடு இருந்தேன். இப்போது எச்சரிக்கையுடன் இருக்கிறேன். வாழ்வில் எவ்வளவு உயரத்துக்குச் செல்கிறீர்களோ, அதற்கு அதிகமாக நீங்கள் விழுவதற்கான காரணத்தை சிலர் தேடுகிறார்கள். அதேநேரம் எனக்கு என் ரசிகர்கள் மத்தியில் அன்பும் ஆதரவும் உள்ளது. நான் அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ