கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து இவர் லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத்தர அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்படி ஏற்கனவே அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் டிராகன் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் எல்ஐசி என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் படத்தின் தலைப்பு எல்ஐகே என்று மாற்றப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சீமான், எஸ்.ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார் காதல் கலந்த கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ட்ரெண்டிங்கில் இருந்த, தற்போதும் பலரின் ஃபேவரைட்டாக இருக்கும் பாடல் ஒன்று மெயின் பாடலாக இடம் பெற்றுள்ளதாம்.
அதாவது இசையமைப்பாளர் அனிருத் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக எனக்கென யாரும் இல்லையே எனும் பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த பாடல் தான் எல்ஐகே படத்தில் மெயின் பாடலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -