கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக கல்கி 2898AD, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியானது. அதே சமயம் கமல், நீண்ட வருடங்கள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் தனது 234 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அசோக் செல்வன், த்ரிஷா, கௌதம் கார்த்திக், அபிராமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகி அதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் ராஜஸ்தான், புதுச்சேரி போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. அதாவது கிட்டத்தட்ட 80% படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக நிறைவடைந்து விடும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிம்பு தனது டப்பிங் பணிகளை தொடங்கினார். எனவே படமானது 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி தற்போது ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. தக் லைஃப் திரைப்படமானது 2024 கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சங்கர், ராம்சரண் கூட்டணியில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படமும் கிறிஸ்மஸ் தினத்தை குறி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.