நடிகர் பகத் பாசில் மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் தமிழ் படங்களிலும் நடித்து பெயர் பெற்று வருகிறார். அந்த வகையில் வேலைக்காரன், மாமன்னன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். அடுத்தது கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்திலும் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலராலும் பாராட்டப்பட்டார். மேலும் இவர் வடிவேலுவுடன் இணைந்து மாரீசன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பகத் பாஸில் நடிப்பில் வெளியான ஆவேஷம் திரைப்படம் கேரளாவை தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பான் இந்திய அளவில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்திலும் தனது வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார் பகத் பாஸில். இவ்வாறு இந்திய அளவில் பெயரையும் புகழையும் சேகரித்து வைத்திருக்கும் பகத் பாஸில் அடுத்ததாக நேரடி இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ராக்ஸ்டார், ஹைவே, அமர்சிங் சம்கிலா ஆகிய படங்களை இயக்கிய பிரபலமான இம்தியாஸ் அலி இயக்க இருக்கிறார்.
இந்த படத்தில் பகத் பாசில் உடன் இணைந்து திரிப்தி டிம்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய இயக்குனர் இம்தியாஸ் அலி, பகத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி இந்த படத்திற்கு இடியட் ஆஃப் இஸ்தான்பூல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -