இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றி படங்களை கொடுத்தார். அடுத்தது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து ஜவான் படத்தின் மூலம் ஆயிரம் கோடி ரூபாயை தட்டி தூக்கினார். மேலும் இவர், அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அதன்படி பிரம்மாண்ட பட்ஜெட்டில், ஹாலிவுட் தரத்தில் தயாராக உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிப்பதாகவும் ஜான்வி கபூர், மிர்ணாள் தாகூர் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கப்போவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. இது தவிர தீபிகா படுகோனிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது.
தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், நடிகை தீபிகா படுகோன் தான் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். ஜான்விகபூர், மிர்ணாள் தாகூர் ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -