கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதில் நடிகர் சிம்பு கமல்ஹாசனுக்கு மகனாக நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் 2024 செப்டம்பர் மாதத்தில் நிறைவடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் சிம்பு டப்பிங் பணிகளை தொடங்கிய நிலையில் பாதி படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க இந்த படமானது 2024 கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் எனவும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பை இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.