spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை அஞ்சலி.... 'ஈகை' படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை அஞ்சலி…. ‘ஈகை’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை அஞ்சலி.... 'ஈகை' படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!தமிழில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதேசமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை அஞ்சலி. அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகி ஈகை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் நடிகை அஞ்சலியின் 50-வது திரைப்படம் ஆகும். அசோக் வேலாயுதம் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்தை பிருந்தா கிருஷ்ணா நிறுவனம் தயாரிக்கிறது. ஸ்ரீதர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் நிலையில் தரன் குமார் இசை அமைக்கிறார். கடந்த 2023ஆம் ஆண்டிலேயே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை அஞ்சலி.... 'ஈகை' படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு! இந்நிலையில் அஞ்சலியின் 38 வது பிறந்தநாள் தினமான இன்று ஈகை பட குழுவினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரின் மூலம் நடிகை அஞ்சலி இப்படத்தில் நேர்மையான அரசாங்க அதிகாரியாக நடித்துள்ளார் என்பது போல் தெரியவந்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ