Homeசெய்திகள்சினிமாநாளை வெளியாகிறது 'அமரன்' படத்தின் முக்கிய அப்டேட்!

நாளை வெளியாகிறது ‘அமரன்’ படத்தின் முக்கிய அப்டேட்!

-

அமரன் படத்தில் முக்கிய அப்டேட் நாளை வெளியாக இருக்கிறது.நாளை வெளியாகிறது 'அமரன்' படத்தின் முக்கிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அமரன். சிவகார்த்திகேயனின் 21 வது படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதன் இசையமைக்கும் பணிகளை கவனித்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே காஷ்மீர் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. நாளை வெளியாகிறது 'அமரன்' படத்தின் முக்கிய அப்டேட்!மறைந்த ராணுவ வீரர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் எந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முகுந்த் V என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது ராணுவத்தின் பின்னணியில் உருவாகி இருப்பதால் வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு படம் தொடர்பான ஏதாவது அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஏற்கனவே படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு நாளை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி அளவில் வெளியாகும் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளன.

MUST READ