மலையாள நடிகர் டோவினோ தாமஸ் விக்ரமை சந்தித்த உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்‘ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

தற்போது அந்தப் படத்தில் ப்ரோமோஷனுக்காக கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் டெல்லி, மும்பை, கொச்சி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் டீம் கேரளா சென்றார். அப்போது பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் விக்ரமை சந்தித்துள்ளார். டோவினோ விக்ரமின் தீவிர ரசிகர் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
டோவினோ தாமஸ், விக்ரமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
“தூய்மையான, அடக்க முடியாத ரசிகர்களின் ஒரு தருணம்! மேஸ்ட்ரோவைச் சந்திக்கும் நம்பமுடியாத வாய்ப்பு எனக்குக் கிடைத்தது – விக்ரம் சார். அவர் எனக்கு என்ன செய்தார் என்பதை நான் எப்படி விவரிப்பது. நான் அந்நியன் படத்தை எண்ணற்ற முறை பார்த்திருக்கிறேன், ஒவ்வொரு முறையும் அவரது நடிப்பு வித்தியாசமாகத் தாக்கும் என்பதை நான் நினைவில் வைத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.