spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிக்ரம் நடிப்பில் படமாகும் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவல்... இயக்குனர் யார் தெரியுமா!?

விக்ரம் நடிப்பில் படமாகும் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவல்… இயக்குனர் யார் தெரியுமா!?

-

- Advertisement -

‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலை திரைப்படமாக எடுக்க இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மதயானைக் கூட்டம்‘ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் விக்ரம் சுகுமாரன். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது ஷாந்தனு நடிப்பில் ராவணக் கோட்டம் படத்தை இயக்கியுள்ளார் அவர்.

we-r-hiring

இந்தப் படத்தில் சாந்தனு இதுவரை பார்க்காத கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் மிகவும் துடிப்பாக நடித்துள்ளார். கயல் ஆனந்தி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்தப் படம் சாந்தனுவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.

இந்நிலையில் வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு இதிகாசம்‘ நாவலை விக்ரம் சுகுமாரன் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீசுக்கு அப்புறம் நடிகர் விக்ரமை சந்திக்க அவர் ஒப்புதல் வாங்கியிருக்கிறாராம்.

MUST READ