நடிகர் சிம்பு பத்து தல படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது 48வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது என்றாலும் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இருந்தபோதிலும் நடிகர் சிம்பு STR48 படத்திற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம் சிம்பு ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களுமே சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தன.
மேலும் STR48 படமானது ‘300’ எனும் ஹாலிவுட் படத்தின் சாயலில் பீரியாடிக் படமாக உருவாக இருக்கிறதாம். எனவே படத்தில் அதிகமான வி எஃப் எக்ஸ் காட்சிகள் இடம் பெற இருக்கின்றன. இதற்கிடையில் STR48 படம் கைவிடப்பட்டதாகவும் கூட பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் STR48 படம் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக STR48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பட குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.