spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினி பிறந்தநாளில் ட்ரிபிள் ட்ரீட்.... ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்!

ரஜினி பிறந்தநாளில் ட்ரிபிள் ட்ரீட்…. ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்!

-

- Advertisement -

தமிழ் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் ரஜினிகாந்த் இந்திய அளவில் கோடான கோடி ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டாரை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.ரஜினி பிறந்தநாளில் ட்ரிபிள் ட்ரீட்.... ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்! அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருவது வழக்கம். அதுபோல வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் 74 ஆவது பிறந்தநாளானது கூடுதல் சிறப்பாக அமையப்போகிறது. அதன்படி ஏற்கனவே நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் கூலி திரைப்படத்தின் புதிய அப்டேட் ரஜினி பிறந்த நாளில் வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது.ரஜினி பிறந்தநாளில் ட்ரிபிள் ட்ரீட்.... ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்! அத்துடன் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ வீடியோ ரஜினி பிறந்தநாள் அன்று வெளியாகும் எனவும் சமீபத்தில் தகவல் கசிந்தது. இதற்காக வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ரஜினி பிறந்தநாளில் ட்ரிபிள் ட்ரீட்.... ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்!அதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு ரஜினி பிறந்தநாளில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. இந்நிலையில் மற்றுமொரு அப்டேட் ரஜினியின் பிறந்தநாளன்று வெளியாக இருக்கிறது. அந்த அப்டேட் வேறு எதுவும் இல்லை. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த தளபதி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரஜினி பிறந்தநாளில் ட்ரிபிள் ட்ரீட்.... ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்!கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான தளபதி திரைப்படம் இன்று வரையிலும் ரசிகர்களின் பேவரைட் படங்களில் ஒன்று. இந்நிலையில் இந்த படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இவ்வாறு ரஜினி பிறந்தநாளில் ட்ரிபிள் ட்ரீட் கிடைக்கப்போகிறது என்ற தகவல் அறிந்த ரசிகர்கள் இப்பொழுதிலிருந்தே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

MUST READ