Homeசெய்திகள்சினிமாகூவத்தூர் சர்ச்சையில் திரிஷா நஷ்ட ஈடாக கேட்டது லட்சமா? கோடியா?

கூவத்தூர் சர்ச்சையில் திரிஷா நஷ்ட ஈடாக கேட்டது லட்சமா? கோடியா?

-

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பூகம்பமாய் வெடித்துக் கொண்டிருப்பது நடிகை திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகை திரிஷா குறித்து, அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு சமீபத்தில் கூவத்தூர் விவகாரத்தில் அவரை தொடர்பு படுத்தி அவதூறாக பேசியிருந்தார். கூவத்தூர் சர்ச்சையில் திரிஷா நஷ்ட ஈடாக கேட்டது லட்சமா? கோடியா?இது தொடர்பாக திரை பிரபலங்கள் பலரும் திரிஷாவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் ஏ வி ராஜு மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் திரிஷா அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஏவி ராஜு இது சம்பந்தமாக மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் நேற்று நடிகை திரிஷா, தன்னைப் பற்றி அவதூறாக பேசிய ஏ வி ராஜு, 24 மணி நேரத்திற்குள் செய்தி நிறுவனங்கள் வாயிலாகவும் யூடியூப் சேனல்கள் மூலமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே வெளியான அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில் அந்த நோட்டீஸில், ஒரு குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதில் அவர் குறிப்பிட்ட தொகை அடிக்கப்பட்டிருந்தது. எனவே திரிஷா தன்னை அவதூறாக பேசியவரிடம் லட்சக்கணக்கில் நஷ்ட ஈடு கேட்டாரா அல்லது கோடிக்கணக்கில் கேட்டாரா என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இது சம்பந்தமான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

MUST READ