நடிகை திரிஷா ஆரம்பத்தில் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார். அதன் பிறகு திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் திரிஷாவிற்கு மீண்டும் ஸ்டார் அந்தஸ்தை பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார் திரிஷா. அதேசமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்து மீண்டும் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார். அந்த வகையில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் விஷ் பம்பர், அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி, டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் ஐடெண்டிட்டி என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது ஏற்கனவே ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஐந்தாவது முறையாக விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது ஆறாவது முறையாக அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப் போகிறார் என்று புதிதாக வெளிவரும் தகவல் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.