நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் சூர்யா, அஜித் விஜயுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு மனைவியாக நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருந்தார். அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் இந்த படத்தை பார்த்து பார்த்து இயக்கியிருக்கிறார். அதன்படி இப்படம் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல் ரீதியாகவும் வெற்றி நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
😗💣🔥⭐️🙏🏻🧿
Nandri mammeyyyyy…. pic.twitter.com/AfKGepOOvr— Trish (@trishtrashers) April 12, 2025
இந்நிலையில் நடிகை திரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து நன்றி மாமே என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அத்துடன் குட் பேட் அக்லி படத்தில் இடம்பெறாத சில நிமட பாடல் காட்சியையும் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.