திரிஷா நடிக்கும் பிருந்தா வெப் தொடரின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்றுள்ளார். அந்த வகையில் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதேசமயம் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஏற்கனவே திரிஷா நடிப்பில் ராங்கி, தி ரோட் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இன்னும் சில படங்களை கைவசம் வைத்திருக்கும் திரிஷா முதன் முதலாக வெப் தொடர் ஒன்றிலும் நடித்திருக்கிறார். இந்த வெப் தொடருக்கு பிருந்தா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் திரிஷாவுடன் இணைந்து இந்திரஜித் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் இந்த பிருந்தா வெப் தொடரை சூர்யா வங்கலா இயக்கியிருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று முடிந்தது.
Brace yourselves, thriller fans. Trisha is coming up with her OTT debut in a gripping new series. Stream #Brinda in all the major languages only on Sony LIV from August 2. @trishtrashers @Indrajith_S @suryavangala530 @andstoriesllp @KollaAshish @shakthikanth @artkolla pic.twitter.com/AqyykY1z9a
— Sony LIV (@SonyLIV) July 8, 2024

அதன் பிறகு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வெப் தொடர் தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. அதன்படி பிருந்தா வெப் தொடரானது 2024 ஆகஸ்ட் 2ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் டீசர்
ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த டீசர்
இணையத்தில் வைரலாகி வருகிறது.


