spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமிகவும் எதிர்பார்க்கப்படும் 'வணங்கான்' பட ட்ரெய்லர் வெளியீடு!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘வணங்கான்’ பட ட்ரெய்லர் வெளியீடு!

-

- Advertisement -

பாலாவின் இயக்கத்திலும் அருண் விஜயின் நடிப்பிலும் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்படும் 'வணங்கான்' பட ட்ரெய்லர் வெளியீடு!

இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் வணங்கான் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. மேலும் இந்த படமானது 2024 ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

we-r-hiring

இந்நிலையில் இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது செய்யாத கொலைக்காக அருண் விஜயை போலீசார் கைது செய்து சிறையில் அடைகின்றனர். அதன்பின் அந்த கொலைப் பழியில் இருந்து தான் நிரபராதி என்பதை அருண் விஜய் எப்படி நிரூபிக்கிறார் என்பது தான் படத்தின் கதையாக இருக்கும் போல் தெரிகிறது. இந்த ட்ரெய்லரில் ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. எனவே அருண் விஜயின் தடம், தடையறத் தாக்க, மிஷன் சாப்டர் 1 போன்ற படங்களைப் போல் இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ட்ரெய்லரின் இறுதியில் இப்படம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ