spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு நிறைவு..... விரைவில் வெளியாகும் ரிலீஸ் தேதி!

‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு நிறைவு….. விரைவில் வெளியாகும் ரிலீஸ் தேதி!

-

- Advertisement -

ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு நிறைவு..... விரைவில் வெளியாகும் ரிலீஸ் தேதி!பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அஞ்சலி, ஜெயராம் போன்ற பலரும் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அரசியல் கலந்த ஆக்சன் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதைத்தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதாவது முதல் நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும் விரைவில் சில அப்டேட்டுகளும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். எனவே கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ