ரஜினியின் வேட்டையன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ரித்திகா சிங், பகத் பாசில், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட பலரும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் இசை வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அடுத்ததாக இந்த படத்தின் டிரைலர் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகும் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -