spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமயில்சாமியின் இறப்பிற்கு உதயநிதி, ராதாரவி, ஜெயராம், நாசர் இரங்கல்

மயில்சாமியின் இறப்பிற்கு உதயநிதி, ராதாரவி, ஜெயராம், நாசர் இரங்கல்

-

- Advertisement -

மயில்சாமியின் இறப்பிற்கு உதயநிதி ஸ்டாலின், நாசர், ராதாரவி, போண்டா மணி, வையாபுரி, பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் தங்கலது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் இரங்கல்,

we-r-hiring

அண்ணனின் மறைவு மிகப்பெரிய அனைவருக்கும் அதிர்ச்சி மற்றும் இழப்பு   ஏற்படுத்தியுள்ளது. நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் குடும்பத்தில் ஒருவர் போல பேசுபவர் , பாசமாக பழகுபவர். மயில்சாமி என்னிடம் அன்புடன் பழகியவர் பொதுமக்களுக்கு தேவையானது குறித்து எப்போதும் என்னிடம் பேசுவார். கலைஞர் மீதும் முதலமைச்சர் மீதும் அன்பை கொண்டவர். என்னுடன் நடித்த படப்பிடிப்பின் போது என்னுடனே இருப்பார். அன்பாக பழகுபவர் என்று கூறி உதயநிதி ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகர் ராதாரவி இரங்கல்,

மயில்சாமி மிகவும் நல்ல மனிதர். அனைவரிடமும் நல்லவர் என பெயர் எடுத்தவர். அவர் உதவி செய்யாத ஆட்களே இல்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் வெறித்தனமான ரசிகர் அவர்.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி இரங்கல்,

என்னுடைய அறுவை சிகிச்சைக்காக ஒரு லட்சம் கொடுத்து உதவி செய்தவர் மயில்சாமி, சிகிச்சைக்கு தேவையான  உதவிகளை செய்வதாகவும் சொன்னார். அவர் ஒரு கொடை வள்ளல் என்று கூறி தனது இரங்கலை தெரிவித்தார் போண்டா மணி.

நகைச்சுவை நடிகர் வையாபுரி இரங்கல்,

என் குடும்பத்தில் மூத்த உறுப்பினர். அவர் கடந்த வாரம் கூட என் குடும்பத்தை வீட்டிற்கு அழைத்து சந்தித்தார். உதவி என கேட்பவர்களுக்கு பையில் இருக்கும் பணத்தை அப்படியே எடுத்துக் கொடுப்பவர் அவர் என்று கூறி அவரது இரங்கலை தெரிவித்தார்.

இயக்குனர் பாண்டியராஜன் இரங்கல்,

எம்ஜிஆரின் பாசமிகு பக்தர். தினமும் அவரைப்பற்றி பேசுவார். அனைவரையும் சிரிக்க வைத்த நல்ல மனிதர். அவரது இறந்துவிட்டதாக நம்பவே முடியவில்லை என்றார் இயக்குனர் பாண்டியராஜன்.

நடிகர் ஜெயராம் இரங்கல்,

என்னுடைய நல்ல நண்பர் மயில்சாமி. நானும் அவரும் மிமிக்ரியில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர்கள். நேரில் சந்திக்கும் போதெல்லாம் மிமிக்ரி குறித்து தான் பேசுவோம். சிவராத்திரி அன்று திருவண்ணாமலைக்கு என்னுடன் வரவேண்டும் என நீண்ட நாளாக அழைத்திருந்தார். இந்த சிவராத்திரி அன்று திருவண்ணாமலையிடமே சென்றுள்ளார் மயில்சாமி என்று கூறி தனது இரங்கலை தெரிவித்தார் நடிகர் ஜெயம்ரவி.

நடிகர் நாசர் இரங்கல்,

தாங்க முடியாத வலி தரும் செய்தி, ரொம்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாருக்கும் தீங்கு நினைக்காத நபர், தன்னுடைய தகுதிக்கு மீறி உதவி செய்யும் நபர். தப்பு என தெரிந்தால் முகத்துக்கு நேராக சொல்பவர். அவருடைய ஸ்தானத்தில் இருந்து அவரது குழந்தைகளை நாங்கள் அரவணைப்போம்.

நகைச்சுவை நடிகை சென்ட்ராயன். எனக்கு வாய்ப்பை வாங்கிக் கொடுத்து வசனத்தை சொல்லிக் கொடுத்தவர் மயில்சாமி தான். எம்.ஜி.ஆர் அவர்களை  நான் பார்த்ததில்லை அவர் உருவத்தில் மயில்சாமி அண்ணனை நான் பார்த்துள்ளேன். கஷ்டம் என்று யார் வந்து கேட்டாலும் கையில் இருப்பதை எடுத்து கொடுத்துவிட்டு அவருடைய பிரச்சினையை பின்பு தான் தீர்த்துக் கொள்வார். சிவராத்திரி அன்று மறைந்திருக்கிறார். இவரை நான் கடவுளாக தான் பார்க்கிறேன்.

MUST READ