பிரபல நடிகரும் துணை முதலமைச்சருமான உதயநிதி, பைசன் படக்குழுவினரை வாழ்த்தி உள்ளார்.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் தற்போது பைசன் – காளமாடன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனமும், அப்பிளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசையமைத்திருக்கிறார். துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக்டோபர் 17) உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பை தந்துள்ளார் மாரி செல்வராஜ் சார். வன்முறை நிறைந்த வாழ்க்கை சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
#Bison திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் @mari_selvaraj சார்.
வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும்…
— Udhay – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) October 16, 2025

ஒரு இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் கொடுத்திருக்கிறார் மாரி சார். படம் பேசுகின்ற அரசியலை உள்வாங்கி மிகச் சிறப்பாக நடித்துள்ள தம்பி துருவ் உள்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். பைசன் – காளமாடன் வெல்லட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.