Homeசெய்திகள்சினிமாஉறியடி விஜய் குமார் நடிக்கும் எலக்சன்... குறிவைத்து படத்தை வெளியிட திட்டம்...

உறியடி விஜய் குமார் நடிக்கும் எலக்சன்… குறிவைத்து படத்தை வெளியிட திட்டம்…

-

உறியடி திரைப்பட புகழ் விஜய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் குமார். வழக்கமான காதல் மற்றும் கமர்ஷியல் படங்களாக இல்லாமல் அரசியல் மற்றும் சமூக கருத்துகள் பேசும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரது முதல் படமாக உறியடி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் விஜய்குமார். 2016-ம் ஆண்டு வெளியான உறியடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உறியடி 2-ம் பாகம் வெளியானது. நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்து இருந்தார். இரண்டு பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
இதைத் தொடர்ந்து விஜய் குமார் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் பைட் கிளப். இப்படத்தை பிரபல முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரித்து இருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால், கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது விஜய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி அப்படத்திற்கு எலக்சன் என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை தமிழ் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பா ரஞ்சித் தயாரித்த சேத்துமான் படத்தை இயக்கியவர் ஆவார். இது அவர் இயக்கும் இரண்டாவது திரைப்டமாகும். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்து, பின்னணி வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

MUST READ