Homeசெய்திகள்சினிமாவசூலைக் குவிக்கும் வாத்தி திரைப்படம்

வசூலைக் குவிக்கும் வாத்தி திரைப்படம்

-

வசூலைக் குவிக்கும் வாத்தி திரைப்படம்

தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை

தெலுங்கு பிரபலம் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்த இப்படம் தெலுங்கிலும் சார் என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார்.

வாத்தி படம் கடந்த பிர்ரவரி 17-ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகி ரசிகர்களிடயே வரவேற்பை பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வாத்தி பட வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து வாத்தி திரைப்படம் உலகம் அளவில் 75 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், வாத்தி படத்தின் வசூல் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, வாத்தி திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

MUST READ