சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான வடக்குப்பட்டி ராமசாமியின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது. அதில் கடவுள் மறுப்பாளரான ஈ.வெ. ராமசாமி
என்னும் பெரியாரை அவமதிப்பது போல வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. அதே சமயம் சந்தானம் தனது எக்ஸ் பக்கத்தில் நான் அந்த ராமசாமி இல்லை என்று குறிப்பிட்டு பொங்கல் தினத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். பெரியாரை சீண்டுவது போல வெளியிடப்பட்ட சந்தானத்தின் பதிவு வெறும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதை தொடர்ந்து சில மணி நேரங்களில் சந்தானம் அந்த பதிவை நீக்கி விட்டார்.
மேலும் இது குறித்து பல்வேறு அமைப்புகள் கண்டனங்கள் எழுப்பிய நிலையில் இது படத்தின் ப்ரோமோஷனுக்கான ஒரு யுக்தி தான் எனவும் பேசப்பட்டது. இருப்பினும் இதுகுறித்து சந்தானம் எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய தலைவரையும், அவருடைய பகுத்தறிவு கொள்கையையும் கலாய்த்து இப்படி அவமதிப்பது சரிதானா என இணைய வாசிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம் எஸ் பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை டிக்கிலோனா படம் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ படம் வருகின்ற பிப்ரவரி இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.