Homeசெய்திகள்சினிமாவடிவேலு, பகத் பாஸில் கூட்டணியின் புதிய படம்.... ஷூட்டிங் எப்போது?

வடிவேலு, பகத் பாஸில் கூட்டணியின் புதிய படம்…. ஷூட்டிங் எப்போது?

-

- Advertisement -

வடிவேலு, பகத் பாஸில் கூட்டணியின் புதிய படம்.... ஷூட்டிங் எப்போது?பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாமன்னன். வடிவேலு, பகத் பாஸில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருந்தால் இந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. அரசியலில் சாதிய ஒடுக்குமுறை குறித்து பேசும் படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது.

மாமன்னனாக நடித்திருந்த வடிவேலுவும் வில்லனாக நடித்திருந்த பகத் பாசிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர். இந்நிலையில் வடிவேலு, பகத் பாசில் கூட்டணியில் மீண்டும் புதிய படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது இந்த புதிய படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி இந்த படம் காமெடி கலந்த திரில்லர் கதை களத்தில் தயாராக உள்ளதாகவும் , ஜனவரி 22ஆம் தேதி சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாமல் இப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடிகை சித்தாரா நடிக்க உள்ளாராம். வடிவேலு, பகத் பாஸில் கூட்டணியின் புதிய படம்.... ஷூட்டிங் எப்போது?மேலும் நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணம் செய்யும் இளைஞனுக்கும் வயதானவருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக கொண்டு உருவாக உள்ளதாக தற்போதைய இடையில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக கொண்டு உருவாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ