நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது சந்திரமுகி -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டு இருபவர் வடிவேலு. இவர் ஒரு சில காரணங்களால் சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக சுராஜ் இயக்கத்தில் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்“ என்னும் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
வடிவேலு, இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தில் நடிக்கிறார். பல கட்டங்களாக நடைபெற்று வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இந்நிலையில், நடிகர் வடிவேலுவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.


அதாவது, ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடிகர் வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


