கேங்கர்ஸ் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சுந்தர். சி முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதற்கு முன்னதாக இவர் கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து சுந்தர்.சி -யும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து
கேத்தரின் தெரசா, வாணி போஜன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனமும் பென்ஸ் மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சத்யா.சி இந்த படத்திற்கு இசையமைக்க வெங்கட் ராகவன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படமானது காமெடி கதைக்களத்தில் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி நடிகர் வடிவேலு இந்த படத்தில் லேடி கெட்டப்பில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. எனவே படத்தில் தான் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் நடிகர் வடிவேலுவும் ஒரு காமெடியனாக இப்படத்தின் மூலம் சிறந்த கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படமானது 2024 ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை (ஏப்ரல் 1) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.