spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா"காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா"... தயாரிப்பாளர் மறைவால் கலங்கும் வைரமுத்து!

“காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா”… தயாரிப்பாளர் மறைவால் கலங்கும் வைரமுத்து!

-

- Advertisement -

மறைந்த தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு கவிஞர் வைரமுத்து நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் நடிகர் அஜித்தின் நண்பராகவும் வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி.

we-r-hiring

அஜித் நடிப்பில் வெளியான ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு ,உள்ளிட்ட 9 படங்களை சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.

அஜித் படங்கள் ம் மட்டுமல்லாமல் காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார். கடைசியாக விமல் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற விலங்கு வெப் சீரிஸில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

கடந்த 8 மாதங்களாக சக்கரவர்த்தி புற்றுநோய் பாதிப்பால் அவதியுற்றார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று நள்ளிரவு உயிர் துறந்தார். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து நேரில் சென்று சக்கரவர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர் பற்றி பதிவும் வெளியிட்டுள்ளார்.

 

 

“நண்பா!

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி!

மறைந்துவிட்டாயா?

அஜித்தை வைத்து நீ தயாரித்த

வாலி, முகவரி, சிட்டிசன்

ரெட், வில்லன், ஆஞ்சநேயா

வரலாறு ஆகிய 7படங்களுக்கும்

என்னையே எழுத வைத்தாயே

தமிழ்க் காதலா!

காசோலைகள்

வந்த இடத்திலிருந்து

சாவோலையா?

கலங்குகிறேன்;

கலையுலகம் உன் பேர்சொல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ