Homeசெய்திகள்சினிமாகாதலர் தின ஸ்பெஷல் படம்..... 'லவ்வர்' படத்தின் முதல் நாள் வசூல்!

காதலர் தின ஸ்பெஷல் படம்….. ‘லவ்வர்’ படத்தின் முதல் நாள் வசூல்!

-

காதலர் தின ஸ்பெஷல் படம்..... 'லவ்வர்' படத்தின் முதல் நாள் வசூல்!ஜெய் பீம் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் மணிகண்டன் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டில் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக குட் நைட் பட கூட்டணியில் நடிகர் மணிகண்டன் நடித்துள்ள படம் லவ்வர். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து கீதா கைலாசம், கண்ணா ரவி, சரவணன், ஹரிஷ் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரபு ராம் வியாஸ் படத்தை இயக்கியிருந்த நிலையில் ஷால் ரோல்டன் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படம் நேற்று காதலர் தின ஸ்பெஷலாக வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆறு வருடங்களாக காதலித்து வரும் காதலர்களுக்கு இடையில் ஆதிக்கம் தலைதூக்கி நிற்கிறது. அதன் பின்னர் இந்த ஆதிக்கத்தினால் காதல் ஜோடிகளின் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளுக்கும் விரிசல்களுக்கும் இடையில் காதல் ஜெயித்ததா? என்பதே படத்தின் கதை.காதலர் தின ஸ்பெஷல் படம்..... 'லவ்வர்' படத்தின் முதல் நாள் வசூல்!

இப்படம் இன்றைய இளைஞர்களுக்கு காதலின் ஆழத்தை உணர்த்தும் வகையில் தரமான படத்தை கொடுத்திருந்தார் இயக்குனர். அந்த வகையில் இப்படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் வெளியான முதல் நாளில் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் லவ்வர் திரைப்படம் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ